Home Featured இந்தியா அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியரின் உடல் சொந்த ஊர் வந்தது!

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியரின் உடல் சொந்த ஊர் வந்தது!

794
0
SHARE
Ad

US IT engineerஐதராபாத் – அமெரிக்காவில் கடந்த வாரம், அமெரிக்கர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் குச்சிபோட்லா (வயது 32) என்ற மென் பொறியியலாளரின் உடல், நேற்று திங்கட்கிழமை விமானம் மூலம் ஐதராபாத் கொண்டு வரப்பட்டது.

பின்னர் அங்கிருந்து அவரது சொந்த ஊரான பச்சுப்பல்லி என்ற பகுதியில், பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று செவ்வாய்க்கிழமை அவருக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றது.

ஸ்ரீனிவாசனின் உடலைப் பார்த்து அவரது தாயார் கதறி அழுதது பார்ப்பவரைக் கலங்க வைத்தது.

#TamilSchoolmychoice

கஷ்டப்பட்டு படிக்க வைத்து அமெரிக்கா அனுப்பி வைத்த தனது மகனுக்கு, இப்படி ஒரு முடிவு ஏற்பட்டிருப்பதை தன்னால் தாங்க முடியவில்லை என ஸ்ரீனிவாசனின் தாயார் கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தில், மதுபானக் கூடம் ஒன்றில், ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா தனது நண்பருடன் அமர்ந்திருந்த போது, அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த முன்னாள் அதிகாரியான ஆடம் புரிண்டன் (வயது 51) என்பவர், தனது கைத்துப்பாக்கியால் ஸ்ரீனிவாசையும், அவரது நண்பரையும் நோக்கி சுட்டார்.

துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதற்கு முன் ஸ்ரீனிவாசை நோக்கி, “என் நாட்டைவிட்டு வெளியே போ” என்று ஆடம் புரிண்டன் கத்தியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இச்சம்பவத்தில், ஸ்ரீனிவாஸ் மரண மடைந்துவிட, அவரது நண்பரும், தடுக்க முயன்ற அமெரிக்கர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.