Home Featured நாடு ‘செடிக்’ ஆதரவில் மலாக்காவில் நடந்த டிஸ்லெக்சியா பட்டறை!

‘செடிக்’ ஆதரவில் மலாக்காவில் நடந்த டிஸ்லெக்சியா பட்டறை!

1301
0
SHARE
Ad

மலாக்கா – பிரதமர் துறையில், பேராசிரியர் டத்தோ முனைவர் என்.எஸ்.இராஜேந்திரனின் தலைமையில் இயங்கும் செடிக் அமைப்பின் நிதி உதவியுடன், கடந்த 25 பிப்ரவரி 2017-ஆம் நாள்  மலாக்கா குபு ஆரம்பத் தமிழ் பள்ளியில், டிஸ்லெக்சியா எனப்படும் வாசிப்பு எழுத்து குறைபாடு (Dyslexia) உள்ள பிள்ளைகளுக்கு, மிக உகந்த கற்றல் முறையை போதிக்க, ஆசிரியர் பட்டறை நடத்தப்பட்டது.

mullai-dyslexia-malacca-2

டிஸ்லெக்சியா பட்டறையில் கலந்து கொண்டவர்களுக்கு கற்றல் பேழை வழங்கப்படுகிறது…

#TamilSchoolmychoice

இந்தப் பட்டறை, மிகச் சிறந்த முறையில் நடைபெற, மலாக்கா மாநில, கல்வி இலாகாவின், தமிழ் மொழி உதவி இயக்குனர் ஆனந்தகுமார் வெள்ளைச்சாமி அவர்களும், மலாக்கா மாநில, கல்வி இலாகாவின் தமிழ் மொழி முகமை அமைப்பாளர் முருகையா சின்னையா அவர்களும் மிக நேர்த்தியாக ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள்.

mullai-dyslexia-malacca

மலாக்காவில் நடைபெற்ற டிஸ்லெக்சியா பட்டறையில் கலந்து கொண்டவர்களோடு முல்லை இராமையா…

66 ஆசிரியப் பெருமக்கள் இந்தப் பட்டறையில் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள். காற்பந்து விளையாட பந்து எவ்வளவு முக்கியமோ, அதே போன்று கற்றல் குறைபாடு உள்ள பிள்ளைகளுக்கு உகந்த, பொருத்தமான கற்பித்தல் முறையும், அதற்கான உபகரணப் பொருட்களும் அவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து செடிக் நிதி ஆதரவில் டிஸ்லெக்சியா கற்பித்தல் பேழை, கலந்து கொண்ட அனைத்து மலாக்கா தமிழ் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டது.

இந்தக் கற்பித்தல் பேழை நீண்ட காலமாக டிஸ்லெக்சியா தொடர்புடைய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருபவரும், டிஸ்லெக்சியா பயிற்சிப் பட்டறைகள் வழங்கி வருபவருமான முனைவர் முல்லை இராமையாவால் தயாரிக்கப்பட்டதாகும்.

Najib-

இந்த நிகழ்ச்சியை, மலேசிய தேசிய டிஸ்லெக்சியா இயக்கம் நடத்தியது. இது போன்ற சமூகத்துக்குப் பயனான நிகழ்ச்சிகளையும், பணிகளையும் ஆற்றுவதற்கு ஆதரவு வழங்கி வரும் செடிக் அமைப்புக்கும், அதன் பொறுப்பாளர் இராஜேந்திரனுக்கும், இந்திய சமுதாயத்தின் தேவைகளை உணர்ந்து பெரும் நிதி ஒதுக்கீடுகளை செடிக் மூலம் சமூக இயக்கங்களுக்கு வழங்கி வரும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்குக்கும் தேசிய டிஸ்லெக்சியா இயக்கம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அந்த இயக்கத்தின் சார்பில் முனைவர் முல்லை இராமையா தெரிவித்திருக்கிறார்.

Dato NS Rajendranமுனைவர் என்.எஸ்.இராஜேந்திரன்…

இதுபோன்று, வரும் மாதங்களில், நெகிரி செம்பிலானைச் சேர்ந்த அனைத்துத் தமிழ் பள்ளிகளுக்கும், செடிக்கின் உதவியுடன், இவ்வியக்கம் பட்டறைகளை நடத்தும்.

டிஸ்லெக்சியா தொடர்பில் இது போன்ற பயிற்சிப் பட்டறைகளை நடத்த ஆர்வம் காட்டும் தமிழ்ப் பள்ளிகளுக்கு தேவையான உதவிகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்குவதற்கும், தேசிய டிஸ்லெக்சியா இயக்கம் தயாராக இருக்கின்றது.

டிஸ்லெக்சியா வகுப்புகள்

தேசிய டிஸ்லெக்சியா இயக்கம் வாசிக்க, எழுத, சிரமப்படும் குறைபாடுகள் கொண்ட டிஸ்லெக்சியா பாதிப்பு உள்ளவர்களுக்காக சிறப்பு  வகுப்புகளை கீழ்க்காணும் முகவரியில் நடத்துகின்றது:

31, Jalan Chenderai ,

Lucky Garden, Bangsar,

Kuala Lumpur

6 வயதுக்கும் மேற்பட்டவர்கள் இந்த வகுப்புகளில் கலந்து கொள்ளலாம்.

தமிழ், ஆங்கிலம், மலாய் ஆகிய மொழிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் இந்த வகுப்புகள் நடத்தப்படும்.

இந்த வகுப்புகளை அரசு சார்பற்ற இயக்கமான மலேசிய தேசிய டிஸ்லெக்சியா இயக்கம் (National Organisation for Dyslexia – NOD) நடத்துகிறது.

மேலும் விவரங்கள் பெற தொடர்பு கொள்ள வேண்டிய செல்பேசி எண்கள்:

 012-3180874, 017-3679740.