Home Featured உலகம் கன்சாசில் இந்தியர்கள் மீது துப்பாக்கிச்சூடு – டிரம்ப் கண்டனம்!

கன்சாசில் இந்தியர்கள் மீது துப்பாக்கிச்சூடு – டிரம்ப் கண்டனம்!

704
0
SHARE
Ad

donald-trumpவாஷிங்டன் – கடந்த வாரம் கன்சாசில் இந்தியர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் அதிபராகப் பதவியேற்ற டிரம்ப், செவ்வாய்க்கிழமை (மலேசிய நேரப்படி இன்று புதன்கிழமை காலை) முதன் முறையாக அமெரிக்க காங்கிரசில் உரையாற்றினார்.

அதில் கன்சாசில் இந்தியர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்துப் பேசிய டிரம்ப், “ஜேவிஸ் மையங்களை குறிவைத்து அச்சுறுத்தல் விடுவது, கன்சாஸ் துப்பாக்கிச்சூடு போன்ற சம்பவங்கள் நாம் கொள்கை ரீதியில் பிளவுபட்டிருப்பதை நினைவுபடுத்துகிறது. நமது நாடு அது போன்ற அசிங்கமான வெறுப்பை வெளிப்படுத்தும் செயல்களுக்குக் கண்டனம் தெரிவிப்பதில் ஒன்றுபட்டு இருக்க வேண்டும்” என்று டிரம்ப் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice