Home Featured உலகம் பாரிஸ் மிருகக்காட்சி சாலையில் ரைனோ கொல்லப்பட்டு கொம்பு திருட்டு!

பாரிஸ் மிருகக்காட்சி சாலையில் ரைனோ கொல்லப்பட்டு கொம்பு திருட்டு!

771
0
SHARE
Ad

Rinoபாரிஸ் – பாரிஸ் அருகே தொய்ரி மிருகக்காட்சி சாலையில், வெள்ளை நிற காண்டாமிருகம் (ரைனோ) ஒன்றை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கொள்ளையர்கள், அதன் கொம்பை இரம்பத்தால் அறுத்து எடுத்துச் சென்றிருக்கின்றனர்.

ஐரோப்பாவில் மிருகக்காட்சி சாலையில் இப்படி ஒரு கொடூரச் சம்பவம் நடந்துள்ளது இதுவே முதல் முறை என நம்பப்படுகின்றது.

மேற்கு பாரிசில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் தொய்ரி மிருகக்காட்சி சாலையில், நேற்று செவ்வாய்க்கிழமை காலை 4 வயதான வெள்ளை காண்டாமிருகமான வின்ஸ் இறந்த நிலையில் கிடந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

அதன் பராமரிப்பாளர் அருகே சென்று பார்த்த போது, அதன் உடம்பில் 3 துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்திருப்பதைக் கண்டிருக்கிறார். அதோடு அதன் கொம்பும் வெட்டப்பட்டு இருந்திருக்கிறது.

உலக வர்த்தகத்தில் காண்டாமிருகத்தின் கொம்பிற்கு ஐ.நா சபை தடை விதித்திருக்கிறது. பிரான்சில் அதனை விற்பனை செய்வது சட்டவிரோதமானது.

ஆனால், ஆசிய நாடுகளான வியட்னாம் போன்றவற்றில், இன்னும் காண்டாமிருகத்தின் கொம்புகளுக்கு மிகப் பெரிய தேவை இருந்து வருகின்றது. கோடிக்கணக்கில் விற்பனை செய்யப்படும் காண்டா மிருகத்தின் கொம்பு பாரம்பரிய மருத்துவத்திற்குப் பயன்படுவது குறிப்பிடத்தக்கது.