Home Featured தமிழ் நாடு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார் பன்னீர்செல்வம்!

உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார் பன்னீர்செல்வம்!

638
0
SHARE
Ad

panneer selvam-சென்னை – முன்னாள் தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை வேண்டும் என்று கூறி ஓ.பன்னீர்செல்வம் இன்று புதன்கிழமை தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

சென்னை எழும்பூரில் உள்ள இராஜரத்னம் மைதானம் அருகே பன்னீர்செல்வத்தோடு, முன்னாள் அமைச்சர் மதுசூதனன், சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.எச்.பாண்டியன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் மனோஜ் பாண்டியன் ஆகியோரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டம் இன்று மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

இதனிடையே, கடந்த திங்கட்கிழமை, ஜெயலலிதாவின் மரணம் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை, அப்பல்லோ மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் ஆகியவை வெளியிட்ட அறிக்கையில் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் எதுவும் இல்லை எனத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.