Home Featured நாடு கிளந்தானில் H5N1 பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டது!

கிளந்தானில் H5N1 பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டது!

772
0
SHARE
Ad

Avian FLuகோத்தா பாரு – கிளந்தானில் H5N1 பறவைக் காய்ச்சல் வைரஸ் பரவியிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

கிளந்தானில் உள்ள கிராமம் ஒன்றில், 3 சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக, அம்மாநில விவசாய குழு அறிவித்திருக்கிறது.

இதனையடுத்து, பறவைக் காய்ச்சல் வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க, கிளந்தான் மாநில அரசு, அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

#TamilSchoolmychoice

கம்போங் புலாவ் தெபு என்ற இடத்தில் 15 நாட்டுக்கோழிகள் இறந்திருப்பதாக கிளந்தான் மாநில விவசாயக்குழுத் தலைவர் டத்தோ சே அப்துல்லா மட் கூறியிருக்கிறார்.

“கால்நடைத் துறையைச் சேர்ந்தவர்கள் இதுவரை பாதிக்கப்பட்ட 170 கோழிகள், வாத்துகள் மற்றும் பறவைகளைக் கைப்பற்றியிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட கிராமத்தில் 100 முட்டைகளையும் அழித்திருக்கிறார்கள்” என்று சே அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன், கம்போடியாவில் H5N1 கண்டறியப்பட்டது. அதற்கு முன்னர் சீனாவில் H7N9 என்ற வைரஸ் பரவி 110 பேர் இறந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.