கோலாலம்பூர் – இன்று சனிக்கிழமை நடைபெற்ற மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில், மன்ற நிகழ்ச்சிகளில் மதுபானம் பரிமாறப்படுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என முகமட் அமிர் ஷாரில் பஹாரி முகமட் நூர் என்ற வழக்கறிஞர் முன்மொழிந்த தீர்மானம் பெரும்பான்மை உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டது.
இந்தத் தீர்மானத்திற்கு எதிராக 588 வாக்குகள் விழுந்த நிலையில், மதுபானம் பரிமாறக் கூடாது என்ற கோரிக்கைக்கு ஆதரவாக 9 பேர் மட்டுமே வாக்களித்தனர். 16 பேர் நடுநிலை வகித்தனர்.
இதைத் தொடர்ந்து, இனி வழக்கறிஞர் மன்றக் கூட்டங்களில் மதுபானம் தாராளமாகப் பரிமாறப்படலாம் என முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.