Home Featured உலகம் ஹாங் காங்கில் திடீரென தடம் மாறிய எஸ்கலேட்டர் – 18 பேர் காயம்!

ஹாங் காங்கில் திடீரென தடம் மாறிய எஸ்கலேட்டர் – 18 பேர் காயம்!

671
0
SHARE
Ad

Hong kongஹாங் காங் – ஹாங் காங்கில் கடந்த சனிக்கிழமை, லங்ஹாம் பிளேஸ் என்ற பகுதியில் அமைந்திருக்கும் மோங் கோக் வணிக வளாகத்தில், மேலே ஏறிக் கொண்டிருந்த எஸ்கலேட்டர் (நகரும் படிக்கட்டு), திடீரென தடம் மாறி, அதிவேகமாகக் கீழே இறங்கியதில், 18 பேர் காயமடைந்தனர்.

ஹாங் காங்கிலேயே அதிக உயரம் கொண்ட உள்அரங்கு எஸ்கலேட்டராகக் கருதப்படும் மோங் கோக் வணிக வளாக எஸ்கலேட்டர், 45 மீட்டர் உயரம் கொண்டதோடு, அந்த வணிக வளாகத்தின் 4-வது தளம் மற்றும் 8-வது தளத்தை இணைகக் கூடியது.

இந்நிலையில், இவ்விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் ஹாங் காங் காவல்துறை, சந்தேகத்தின் பேரில் அந்த எஸ்கலேட்டரைப் பராமரித்து வந்த இரு பணியாளர்களைக் கைது செய்திருக்கிறது.

#TamilSchoolmychoice