ஜெய்ப்பூர் – தனது அதிகாரபூர்வ இந்திய வருகையின் ஒரு பகுதியாக நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நஜிப் துன் ரசாக் ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூர் வந்தடைந்தார்.
ஜெய்ப்பூர் வந்தடைந்த நஜிப்புக்கு வரவேற்பு வழங்கப்படுகிறது…
கோட்டை கொத்தளங்களைக் கொண்ட இந்தியாவின் பழம் பெருமைகளையும், பாரம்பரியங்களையும் உள்ளடக்கிய இந்த நகர் அழகாக இருப்பதாக நஜிப் கருத்து தெரிவித்திருக்கிறார்.
“எனது இந்திய வருகையைத் தொடரும் நோக்கில் தற்போது நான் ஜெய்ப்பூரில் இருக்கிறேன். இங்கு எங்கு பார்த்தாலும் ‘பிங்க்’ நிறம் (இளம் சிவப்பு) அனைவருக்கும் பிடித்தமான நிறமாக இருக்கிறது. ஒவ்வொரு கட்டிடமும் அந்த வண்ணத்தில்தான் இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
ராஜஸ்தான் முதல்வரின் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கு முன்பாக, நஜிப் தலைமையில், மலேசிய அமைச்சர்கள் மற்றும் வர்த்தகப் பிரதிநிதிகளின் முன் ஆலோசனை கூட்டம் (Pre-Council meeting) நடைபெற்ற போது எடுக்கப்பட்ட படம்.
ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே (படம்) மற்றும் பிரதிநிதிகளுடன் வர்த்தகக் கூட்டத்தில் பிரதமர் நஜிப் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் மலேசிய நிறுவனங்களுக்கு ராஜஸ்தானில் பல்வேறு வர்த்தக வாய்ப்புகள் குறித்துக் கலந்தாலோசிக்கப்பட்டன.