Home Featured கலையுலகம் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: விஷால் உட்பட அவரது அணியில் 17 பேர் வெற்றி!

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: விஷால் உட்பட அவரது அணியில் 17 பேர் வெற்றி!

957
0
SHARE
Ad

Vishal-speaking to reporters-after lodging repportசென்னை – தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னை அண்ணா நகர், கந்தசாமி நாயுடு கல்லூரி வளாகத்தில் நடைபெற்று முடிந்தது.

நேற்று இரவில் வெளியான அதன் முடிவுகளின் படி, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட நடிகர் விஷால் வெற்றி பெற்றார். அவரது அணி சார்பில் போட்டியிட்ட பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன் ஆகியோர் துணைத்தலைவராக வெற்றி பெற்றிருக்கின்றனர்.

அதோடு, விஷால் அணி சார்பில் போட்டியிட்டவர்களில் மொத்தம் 17 பேர் வெற்றி பெற்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள் பட்டியல்

தலைவர்

விஷால்

துணைத் தலைவர்கள்

கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ்

செயலாளர்கள்

கே.இ. ஞானவேல்ராஜா
கதிரேசன்

பொருளாளர்

எஸ்.ஆர்.பிரபு

21 செயற் குழு உறுப்பினர்கள்

சுந்தர் .சி
பார்த்திபன்
பாண்டிராஜ்
ஆர்.வி. உதயகுமார்
மன்சூர் அலிகான்
எஸ்.எஸ். துரைராஜ்
ஆர்.கே. சுரேஷ்
ஆர்யா
எஸ். ராமச்சந்திரன்
ஜெமினி ராகவா
அபினேஷ் இளங்கோவன்
எ.எல். உதயா
எம். கஃபார்
பிரவீன்காந்த்
மனோஜ்குமார்
பி.எல். தேனப்பன்
எஸ்.வி. தங்கராஜ்
கே. பாலு
எம்.எஸ். அன்பு
எஸ்.எஸ். குமரன்
டி.ஜி. தியாகராஜன்