Home Featured நாடு ஏப் 8-ம் தேதி, தேசிய அளவில் கடப்பிதழ் சேவை மையங்கள் இயங்காது!

ஏப் 8-ம் தேதி, தேசிய அளவில் கடப்பிதழ் சேவை மையங்கள் இயங்காது!

804
0
SHARE
Ad

malaysian-passportகோலாலம்பூர் – மலேசியக் குடிநுழைவு இலாகாவின் கணினி முறைகளில் பெரிய அளவிலான மேம்பாடுகள் செய்ய விருப்பதால், வரும் ஏப்ரல் 8-ம் தேதி, தேசிய அளவில், கடப்பிதழ் சேவை மையங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

குடிநுழைவு இலாகாவின் தலைமையகங்கள், நகர்புற உருமாற்று மையங்கள் மற்றும் கிராமப்புற உருமாற்று மையங்கள் ஆகியவை வரும் ஏப்ரல் 8-ம் தேதி, அதிகாலை 12 மணியிலிருந்து, மதியம் 11.59 மணி வரை செயல்படாது என்று நேற்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தேசிய குடிநுழைவு இலாகா குறிப்பிட்டிருக்கிறது.

மேலும், “குடிநுழைவு இலாகாவின் முதன்மை கணினி முறைகளின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. இப்பணிகள் நடைபெறும் நேரத்தில், மைஐஎம்எம்ஸ் தளத்தைப் பார்வையிட முடியாது” என்று அறிக்கை கூறுகின்றது.