Home Featured நாடு மாஸ் விமானம் தரையிறங்கும்போது சறுக்கியது!

மாஸ் விமானம் தரையிறங்கும்போது சறுக்கியது!

821
0
SHARE
Ad

சிபு – சரவாக் மாநிலத்தில் உள்ள சிபு நகரின் விமான நிலையத்தில் நேற்று சனிக்கிழமை இரவு 10.17 மணியளவில் கோலாலம்பூரில் இருந்து வந்த மாஸ் போயிங் 737-800 ரக விமானம் தரையிறங்கியபோது கடும் மழை காரணமாக சறுக்கியது.

mas-plane-skids-sibu-08042017சறுக்கலுடன் தரையிறங்கிய மாஸ் விமானம்….

அந்த சமயத்தில் விமானத்தில் 61 பயணிகளும், 6 விமானப் பணியாளர்களும் இருந்தனர். இருப்பினும் யாரும் காயமடையவில்லை என்றும் விமானத்தின் அவசரக் கதவுகள் வழியாக, இரண்டு சறுக்கிச் செல்லும் படுதாக்களின் (slide rafts) மூலம் அவர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர் என்றும் மாஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

#TamilSchoolmychoice

பயணிகள் அனைவரும் மழை காரணமாக முழுமையாக நனைந்திருந்தாலும், அவர்கள் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு, அவர்களுக்கு. தயாராக இருந்த மருத்துவக் குழுவினர் உதவிகள் வழங்கினர்.

எம்எச் 2718 என்ற வழித் தட எண் கொண்ட அந்த விமானம் நேற்றிரவு 9.30 மணிக்குத் தரையிறங்க வேண்டியத தருணத்தில் இடியுடன் கூடிய கடும் மழை காரணமாக ஆட்டம் கண்டதாக பயணிகள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக, சுமார் அரை மணி நேரம் வானத்திலேலே வட்டமிட்டுக் கொண்டிருந்த பின்னர், விமானத்தை இரண்டாவது முயற்சியில் விமானி தரையிறக்கினார்.

இந்த விபத்து காரணமாக நேற்றிரவு மூடப்பட்ட சிபு விமான நிலையம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வழக்கம்போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.