Home Featured உலகம் தீ விபத்து: சிங்கை விமான நிலையம் 2-வது முனையம் மூடப்பட்டது

தீ விபத்து: சிங்கை விமான நிலையம் 2-வது முனையம் மூடப்பட்டது

1010
0
SHARE
Ad

singapore-Changi-Airport

சிங்கப்பூர் – இன்று செவ்வாய்க்கிழமை சில மணி நேரங்களுக்கு முன்னர் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் 2-வது முனையத்தில் (டெர்மினல் 2) ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அந்த முனையம் மூடப்பட்டது.

சிங்கப்பூருக்கான விமான சேவைகளும், சிங்கையிலிருந்து உலகின் மற்ற பகுதிகளுக்குப் புறப்படும் விமானங்களின் சேவைகளும் இதனால் பாதிப்படைந்திருக்கின்றன.

#TamilSchoolmychoice

இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.43 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், சிங்கை பொது தற்காப்பு அதிகாரிகள் உடனடியாக பதில் நடவடிக்கையில் இறங்கி தீயை அணைத்ததாகவும் விமான நிலையம் சார்பாக தெரிவிக்கப்பட்டது.

சாங்கி விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் இருந்து புறப்படும் பயணிகள் தாமதங்களுக்குத் தயாராக இருக்கும்படி சாங்கி விமான நிலையத்தின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.