Home Featured நாடு ஹாடி அவாங்குக்கு இருதய அறுவைச் சிகிச்சை!

ஹாடி அவாங்குக்கு இருதய அறுவைச் சிகிச்சை!

875
0
SHARE
Ad

Hadi Awang PAS President

கோலாலம்பூர் – பாஸ் கட்சியின் தேசியத்தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்குக்கு தேசிய இருதய மருத்துவமனையில் இருதய அறுவைச் சிகிச்சை இன்று செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

மூன்று மணி நேரம் நீடித்த இந்த அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து, 69 வயதான ஹாடி அவாங் தீவிரக் கண்காணிப்பு சிகிச்சை பிரிவில் தற்போது இருந்து வருகிறார்.

#TamilSchoolmychoice

இருதயத்துக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் ஏற்பட்ட இரத்த ஒழுகல் காரணமாக ஹாடி அவாங்குக்கு இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

ஹாடி அவாங் திரெங்கானுவில் உள்ள மாராங் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினருமாவார்.