Home Featured நாடு கைதிகள் தப்பியோட்டம்: இந்தோனிசியாவுடன் புக்கிட் அம்மான் பேச்சுவார்த்தை!

கைதிகள் தப்பியோட்டம்: இந்தோனிசியாவுடன் புக்கிட் அம்மான் பேச்சுவார்த்தை!

1036
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பாலி சிறையில் இருந்து தப்பித்த, ஒரு மலேசியக் கைதி உட்பட நான்கு பேர் குறித்த விவரங்களை அறிய இந்தோனிசிய அதிகாரிகளுடன், புக்கிட் அம்மான் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது.

இது குறித்து புக்கிட் அம்மான் சிறப்பு பிரிவுத் துறை இயக்குநர் ஆணையர் டத்தோஸ்ரீ மொகமட் ஃபசி ஹாருன் கூறுகையில், “தப்பித்த மலேசியர் தீவிரவாத செயல்பாடுகளில் எதிலும் ஈடுபட்டிருக்கிறாரா? அல்லது வேறு எதும் குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறாரா? என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றோம்” என்று தெரிவித்தார்.

டென்பசாரில் உள்ள கெரோபோகான் சிறையில் இருந்து மலேசியர் டீ கோக் கிங், ஆஸ்திரேலியர் ஷான் எட்வர்ட் டேவிட்சன், பல்ஜீரியாவைச் சேர்ந்த டிமிடர் நிக்கோலோவ் மற்றும் இந்தியர் சையத் முகமட் ஆகிய நால்வரும் சுரங்கப்பாதை தோண்டி தப்பித்துவிட்டதாக இந்தோனிசியா அறிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

தற்போது அந்த சுரங்கப்பாதையை ஆய்வு செய்து வரும் அதிகாரிகள், 12 மீட்டர் நீளமுள்ள அச்சுரங்கப்பாதையைத் தோண்ட ஒரு வாரம் ஆகியிருக்கலாம் எனத் தெரிவித்திருக்கின்றனர்.

இதனையடுத்து, தப்பிச் சென்ற கைதிகளைப் பிடிக்க பாலி முழுவதும் காவல்துறை வலை வீசித் தேடி வருகின்றது.