புதுடில்லி – பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இருவருக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் ஜூன் 25, 26-ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
டிரம்ப் அதிபரான பின்னர் மோடியுடன் தொலைபேசி வழி அவர் உரையாடல்கள் நடத்தியிருந்தாலும், இருவருக்கும் இடையில் நேரடி சந்திப்புகள் இதுவரை நடைபெற்றதில்லை.
இந்நிலையில் மோடி ஜூன் 25, 26 தேதிகளில் அமெரிக்கா செல்வார் என்றும் அப்போது டிரம்புடன் பேச்சு வார்த்தைகள் நடத்துவார் என்றும், பயங்கரவாதம், இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகள், தென் சீனக் கடல் பகுதியில் ஏற்பட்டிருக்கும் பதட்டம், இந்திய பணியாளர்களுக்கு வழங்கப்படும் விசா, போன்ற அம்சங்கள் அவர்கள் இருவருக்கும் இடையிலான பேச்சு வார்த்தையில் முக்கிய இடம் பெற்றிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.