Home Featured தமிழ் நாடு நீதிபதி கர்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி – மருத்துவமனையில் அனுமதி!

நீதிபதி கர்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி – மருத்துவமனையில் அனுமதி!

1308
0
SHARE
Ad

சென்னை – நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், கடந்த செவ்வாய்க்கிழமை கோவையில் கைது செய்யப்பட்ட கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணன், நேற்று புதன்கிழமை சென்னையில் இருந்து கொல்கத்தா கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவரை சிறையில் அடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. முன்னதாக அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

அப்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக கர்ணன் கூறியதையடுத்து, அவரைப் பரிசோதனை செய்த சிறை மருத்துவர்கள், உயர் இரத்த அழுத்தம் இருப்பதாகக் கூறி கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதித்தனர்.

#TamilSchoolmychoice

தற்போது அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.