Home இந்தியா புதிய கட்சி தொடங்கினார் முன்னாள் நீதிபதி கர்ணன்!

புதிய கட்சி தொடங்கினார் முன்னாள் நீதிபதி கர்ணன்!

1185
0
SHARE
Ad

புதுடெல்லி – அண்மையில் சிறையில் இருந்து விடுதலையான உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியான தமிழகத்தைச் சேர்ந்த சி.எஸ்.கர்ணன் புதியக் கட்சி ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தன் கட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து பெண் வேட்பாளரை நிறுத்தப்போவதாகவும் சி.எஸ்.கர்ணன் அறிவித்திருக்கிறார்.

தமிழகத்தைச் சேர்ந்தவரான சி.எஸ்.கர்ணன் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வந்தார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், அவரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்தது உச்ச நீதிமன்றம்.

ஆனால், தன்னை மாற்றம் செய்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக கர்ணன் தடை விதித்தார்.

அதோடு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது புகாரையும் அளித்தார்.

இதனையடுத்து, கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்த உச்சநீதிமன்றம், அவரைக் கைது செய்ய உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் தலைமறைவாக இருந்த கர்ணன் கைது செய்யப்பட்டு 6 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் தற்போது ‘ஊழல் எதிர்ப்பு சக்தி கட்சி’ என்ற புதிய கட்சியை கர்ணன் துவங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.