Home தேர்தல்-14 அன்வார் விடுதலை: அனைத்துலக அளவில் செய்தியானது

அன்வார் விடுதலை: அனைத்துலக அளவில் செய்தியானது

934
0
SHARE
Ad
17 மே தேதியிட்ட வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கையின் முதல் பக்கத்தை அலங்கரிக்கும் அன்வாரின் விடுதலை செய்தி

கோலாலம்பூர் – புதன்கிழமை (16 மே) டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் அனைத்துலக அளவில் மிகப் பிரபலமான செய்தியாக ஊடகங்களில் வெளியிடப்பட்டது.

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல நாளிதழான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நேற்று வியாழக்கிழமை வெளியான தனது பதிப்பில் அன்வாரின் விடுதலையை முதல் பக்கச் செய்தியாகப் பிரசுரித்திருந்தது.

விடுதலை செய்யப்பட்ட அதே நாளில் இரவில் பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அன்வார் இப்ராகிம், உலகிலுள்ள பல முஸ்லீம் நாடுகளுக்கு மலேசியா முன்னுதாரணமாகியுள்ளது எனக் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

உலகெங்கிலும் இருந்து தன்னை அழைத்த முஸ்லீம் நாடுகளின் தலைவர்கள் “அண்மையக் காலங்களில் முஸ்லீம்களைப் பற்றி எதிர்மறையான தகவல்களையே ஊடகங்கள் தெரிவித்து வந்த வேளையில், மலேசியாவில் ஜனநாயக ரீதியாக ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைப் பார்த்து நாங்கள் பெருமைப்படுகிறோம்” என்று கூறியதாக அன்வார் பெட்டாலிங் ஜெயா பொதுக் கூட்டத்தில் தெரிவித்தார்.