Home தேர்தல்-14 அன்வார் உரையைக் கேட்க பெட்டாலிங் ஜெயாவில் ஆயிரக்கணக்கில் கூடினர்

அன்வார் உரையைக் கேட்க பெட்டாலிங் ஜெயாவில் ஆயிரக்கணக்கில் கூடினர்

854
0
SHARE
Ad
16 மே 2018 – அன்வார் உரையைக் கேட்கத் திரண்டக் கூட்டம்

பெட்டாலிங் ஜெயா – நேற்று புதன்கிழமை இரவு மூன்றாண்டுகளுக்குப் பின்னர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நிகழ்த்திய முதல் உரையைக் கேட்கவும், அவரைக் காணவும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பாடாங் தீமோர் திடலில் கூடினர்.

அந்தக் கூட்டத்தில் பெர்சாத்து கட்சித் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின், ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், அமானா கட்சித் தலைவர் முகமட் சாபு, பிகேஆர் கட்சித் தலைவி வான் அசிசா மற்றும் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணித் தலைவர்கள் பலரும் உரையாற்றினர்.

பின்னார் உரையாற்றிய அன்வார் பல்வேறு விவகாரங்கள் குறித்து சுமார் 45 நிமிடங்கள் உரையாற்றினர்.

#TamilSchoolmychoice

அன்வாரின் உரையை வரலாற்றுபூர்வ சம்பவமாக, டிவி3 தொலைக்காட்சி நேரலையாக ஒளிபரப்பிய அதிசயமும் நேற்று நிகழ்ந்தது.

மேலும் இணைய ஊடகங்களிலும், முகநூல் பக்கங்களிலும் கூட நேரலையாக ஒளிபரப்பான அவரது உரையை உலகம் முழுவதும் இலட்சக்கணக்கானோர் செவிமெடுத்திருப்பர் என மதிப்பிடப்படுகிறது.

70 வயதைக் கடந்து விட்டாலும், மூன்றாண்டுகள் சிறைவாசம், அறுவைச் சிகிச்சை, அதன் பின்னர் செராஸ் மருத்துவமனையில் மறுவாழ்வு சிகிச்சை – ஆகியவற்றை அனுபவித்திருந்தாலும், அன்வாரின் உடல் மொழியிலும், ஆவேசமான உரையிலும், உற்சாகத்திலும் கொஞ்சமும் மாற்றமில்லை.

“நான் வந்து விட்டேன். திரும்பி வந்து விட்டேன். மூன்றாண்டுகளுக்கு முன்னர் எப்படி சென்றேனோ அப்படியே திரும்பி வந்து விட்டேன்” – என்று அவர் கூறுவது போல் இருந்தது அவரின் உரை.