இந்நிலையில், ஆட்சியமைக்க எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதனையடுத்து, 78 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, 37 இடங்களைப் பெற்ற மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியது.
என்றாலும், 104 இடங்களைப் பெற்ற பாஜக-வின் எட்டியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் வாஜ்பாய் வாலா அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்திருக்கிறார்.
அதன்படி, இன்று வியாழக்கிழமை காலை இந்திய நேரம் 9.30 மணியளவில் எட்டியூரப்பா கர்நாடக முதல்வராகப் பதவியேற்கிறார்.
எட்டியூரப்பா பதவியேற்று 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் ஆளுநர் உத்தரவிட்டிருக்கிறார்.
Comments