Home தேர்தல்-14 பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி பதிவு பெற்றது – மொகிதின் அறிவிப்பு

பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி பதிவு பெற்றது – மொகிதின் அறிவிப்பு

846
0
SHARE
Ad
16 மே பக்காத்தான் கூட்டத்தில் உரையாற்றும் மொகிதின் யாசின்

பெட்டாலிங் ஜெயா – நேற்று பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பாடாங் தீமோர் திடலில் நடைபெற்ற பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் மாபெரும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரிபூமி பெர்சாத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின், பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி முறையாக மே 16-ஆம் தேதி பதிவு பெற்றது என அறிவித்தார்.

இதில் உள்துறை அமைச்சராகத் தனது தலையீடு எதுவும் இல்லை என்றும் காரணம், தான் இன்னும் உள்துறை அமைச்சராகப் பதவியேற்கவே இல்லை என்றும் அவர் கூறினார்.

உள்துறை அமைச்சின் தலைமைச் செயலாளரே இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அதே வேளையில் பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து கட்சியின் பதிவுக்கு இடைக்காலத் தடை விதிக்கும் விவகாரமும் ஒரு முடிவுக்கு வந்து விட்டதாகவும், இனி பெர்சாத்து கட்சி சட்டப்படி செயல்படலாம் என்றும் மொகிதின் அறிவித்தார்.