Home Featured நாடு சிங்கப்பூர் பிரதமரைப் போல் நஜிப் ஏன் நடந்து கொள்ளவில்லை? – சைனுடின் கருத்து!

சிங்கப்பூர் பிரதமரைப் போல் நஜிப் ஏன் நடந்து கொள்ளவில்லை? – சைனுடின் கருத்து!

1133
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அண்டை நாடான சிங்கப்பூரின் பிரதமர் லீ சியான் லூங், தனது உடன்பிறந்தவர்களால் ஏற்பட்டிருக்கும் குடும்பத் தகராறு குறித்து சிங்கப்பூர் மக்களிடம் அண்மையில் மன்னிப்புக் கேட்டார்.

லீ சியான் லூங் வெளியிட்டிருக்கும் அக்காணொளி, சிங்கப்பூர் மக்களிடையே அவர் மீது மேலும் மரியாதையை அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில், லீ -யின் செயல்பாட்டை, மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் செயல்பாடுகளுடன் ஒப்பிட்டிருக்கும் முன்னாள் தகவல் தொடர்பு அமைச்சர் சைனுடின் மைதீன், தன் மீது இத்தனை ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்து நஜிப் வாய் திறக்காமல் இருப்பது குறித்து விமர்சித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

“அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியினர் முன்னிலையில் முழு பொது விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாய் அவர் (லீ) வாக்குறுதி கொடுத்திருக்கிறார். சார்பற்ற இந்த விசாரணையில் கேட்கப்படும் அனைத்துக் கேள்விகளுக்கு பதிலளிக்க அவர் தயாராக இருக்கிறார்.”

“யாரெல்லாம் லீயின் அந்தக் காணொளியைப் பார்த்தார்களோ, அவர்களுக்கு இவ்வளவு ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், சிங்கப்பூர் பிரதமரைப் போல் ஏன் செய்ய விரும்பவில்லை என்ற கேள்வி எழும்” என்று சைனுடின் தனது வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கிறார்.

சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ குவான் இயூ மறைந்த பின்னர், அவரது மகனான நடப்பு பிரதமர் லீ சியான் லூங்கிற்கும், அவரது உடன்பிறந்தவர்களுக்கும் இடையில், சொத்துப் பிரச்சினை தலை தூக்கியது.

லீ குவான் இயூ கூறிய விசயங்களை லீ சியான் லூங் நிறைவேற்றவில்லை என்றும், அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார் என்றும் லீயின் உடன்பிறந்தவர்கள் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.