Home Featured கலையுலகம் இன்ஸ்டாகிராம் பதிவுகள்: தீபிகாவின் ‘மேக்சிம்’ அட்டைப்பட கலக்கல் காட்சிகள்!

இன்ஸ்டாகிராம் பதிவுகள்: தீபிகாவின் ‘மேக்சிம்’ அட்டைப்பட கலக்கல் காட்சிகள்!

1170
0
SHARE
Ad

மும்பை – இந்திப் படவுலகின் கவர்ச்சிக் கன்னியாக அறிமுகமாகிப் பின்னர் உலகம் எங்கும் புகழ் பெற்றவர்களில், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா ஆகியோரை அடுத்து, உலக அளவில் அனைத்துத் தரப்பு இரசிகர்களையும் தனது காந்தக் கவர்ச்சியால் ஈர்த்திருப்பவர் தீபிகா படுகோனே.

#TamilSchoolmychoice

அப்பா பிரகாஷ் படுகோனே அந்தக் காலத்தில் புகழ்பெற்ற பூப்பந்து (பேட்மிண்டன்) விளையாட்டு வீரர். மலேசியாவுக்கும் பலமுறை வந்து பூப்பந்து போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.

தந்தை வழியில் இந்த கர்நாடக மண்ணின் அழகுப் பூவும் பூப்பந்துத் துறையில் சாதிக்கப் போகிறது என அனைவரும் காத்திருந்தனர். இளம் வயதில் தீபிகாவும் அந்த அளவுக்கு பூப்பந்து விளையாட்டில் கலக்கினார்.

ஆனால், பருவ வயதை அடைந்ததும், அவரது மனம் விளம்பரத் துறையிலும், மாடலிங் துறையிலும் சென்றது. மாடலிங் துறையில் புகழ் பெறத் தொடங்கியவர் மீது ஷாருக்கானின் கண்பார்வை பட, ‘ஓம் சாந்தி ஓம்’ படத்தின் கதாநாயகியானார். அதன்பின்னர் இந்திப் படங்கள், ஹாலிவுட் படங்கள் என இன்றைக்கு அம்மணி உலகப் புகழ் பெற்று விட்ட ஒரு நடிகை.

இருப்பினும், இன்னும் மாடலிங் மற்றும் விளம்பரத் துறையில் ஈடுபாடு காட்டும் தீபிகா அந்தத் துறையிலும் கோடிகளைக் குவித்து வருகிறார். பல அனைத்துலகப் பொருட்களின் விளம்பரத் தூதுவராகவும் (பிராண்ட் அம்பாசிடர்) உலா வருகின்றார் தீபிகா.

தீபிகாவைத் தங்களின் அட்டைப் படங்களில் அலங்கரிக்க இன்னும் பல அனைத்துலக பத்திரிக்கைகள் போட்டி போடுகின்றன. அண்மையில் மேக்சிம் என்ற அனைத்துலக இதழின் ஜூன்/ஜூலை பதிப்பின் அட்டைப் படத்தை அலங்கரித்திருப்பது தீபிகாதான்.

நீண்ட, அழகிய கால்களைக் கொண்ட தீபிகாவின் காலழகை மையப்படுத்திய அசத்தல் புகைப்படங்களோடு வெளிவந்திருக்கின்றது மேக்சிம் இதழ். அந்தப் புகைப்படங்களில் சிலவற்றைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டு இரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறார் தீபிகா.

அந்தப் படங்களில் சில இதோ உங்களின் பார்வைக்கு: