Home Featured நாடு சுங்கை சிப்புட்டில் அமைகிறது நாட்டின் 529-வது தமிழ்ப் பள்ளி!

சுங்கை சிப்புட்டில் அமைகிறது நாட்டின் 529-வது தமிழ்ப் பள்ளி!

942
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாட்டில் தமிழ்ப் பள்ளிகளின் தரம் உயர்த்தும் அதே நேரத்தில், எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் மஇகா மேற்கொண்டு வரும் முயற்சிகளின் விளைவாக, புதிய தமிழ்ப் பள்ளி ஒன்று பேராக் மாநிலத்தின் சுங்கை சிப்புட்டில் அமையவிருக்கின்றது.

ஹீவூட் தமிழ்ப்பள்ளி (SJK (TAMIL) HEAWOOD) என அழைக்கப்படவுள்ள அப்பள்ளி கட்டப்படுவதற்கான அங்கீகாரக் கடிதத்தை கடந்த திங்கட்கிழமை ஜூன் 19-ஆம் தேதி கோலாலம்பூரில் சுகாதார அமைச்சில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் ஹீவூட் தமிழ்ப் பள்ளிக்கான நடவடிக்கைக் குழுவின் தலைவர் சொ.தியாகராஜனிடம் வழங்கினார்.

#TamilSchoolmychoice

தியாகராஜன் தலைமையிலான நடவடிக்கைக் குழுவினர் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்தப் புதிய பள்ளி அமையவிருப்பதற்கு தீவிரமாகப் பாடுபட்டு வந்துள்ளனர்.

சுங்கை சிப்புட்டில் கட்டப்படவிருக்கும் இப்பள்ளி நாட்டின் 529 வது தமிழ்ப்பள்ளியாகும். 12 வகுப்பறைகளைக் கொண்ட இப்பள்ளி சுமார் 12.45 மில்லியன் ரிங்கிட் செலவில் நிர்மாணிக்கப்படவிருக்கிறது.

பள்ளி கட்டுமானத்திற்கான தொகையைக் காட்டும் மாதிரி காசோலையை ஹீவூட் தமிழ்ப் பள்ளியின் நடவடிக்கைக் குழுவின் தலைவர் தியாகராஜனிடம் (சிவப்பு நிற சட்டையில் இருப்பவர்) டாக்டர் சுப்ரா வழங்குகிறார்

புதிய ஆறு தமிழ்ப் பள்ளிகளில், இதர ஐந்து பள்ளிகள், சுங்கைப் பட்டாணியில் தாமான் கெளாடி தமிழ்ப்பள்ளி, கிள்ளானில் தாமான் செந்தோசா தமிழ்ப்பள்ளி, பெட்டாலிங் ஜெயாவில் பி.ஜே.எஸ்.ஐ. தமிழ்ப்பள்ளி, உலு லங்காட்டில் பண்டார் மக்கோத்தா செராஸ் தமிழ்ப்பள்ளி மற்றும் மாசாயில் பண்டார் ஸ்ரீ ஆலாம் தமிழ்ப்பள்ளி ஆகியவையாகும்.

ஹீவுட் தமிழ்ப் பள்ளிக்கான அங்கீகாரக் கடிதம் வழங்கும் நிகழ்ச்சியில் கல்வித் துணையமைச்சர் டத்தோ பி. கமலநாதன், பிரதமர் துறை துணையமைச்சர் டத்தோ தேவமணி, பிரதமர் துறையின் கீழ் செயல்படும் செடிக் தலைமை இயக்குநர் டத்தோ எஸ். என். ராஜேந்திரன், பேரா மாநில ம இ கா தொடர்புக் குழுத் தலைவர் டத்தோ இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.