குவாங்சி – நானிங்கில் உள்ள குவாங்சி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், கடை ஒன்றில் வாங்கிய நூடுல்சில், சிறிய பாம்பு ஒன்று காணப்பட்டதால், அந்த உணவு தயாரித்த கடை, சுகாதார அதிகாரிகளால் மூடப்பட்டது.
வழக்கமாகச் சாப்பிடும் அக்கடையில், அம்மாணவி, தனக்கும், தனது தோழிக்குமாக இரண்டு கிண்ணங்கள் நூடுல்ஸ் வாங்கி எடுத்துச் சென்றிருக்கிறார்.
ஒன்றைத் தனக்கு வைத்துக் கொண்டு, மற்றொன்றை தனது தோழிக்குக் கொடுத்துவிட்டு சாப்பிடத் தொடங்கிய போது, தோழி சாப்பிட்ட அந்த நூடுல்சில் ஒரு சிறிய பாம்பு ஒன்று இருந்திருக்கிறது.
அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், மற்ற மாணவிகளுக்கும் சொன்னதோடு, அந்த நூடுல்சைப் படம் பிடித்து பேஸ்புக்கில் பதிவு செய்தனர்.
அது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக அக்கடைக்குச் சென்ற அதிகாரிகள், கடை மிகவும் சுகாதாரமின்றி காணப்பட்டதால், உடனடியாக விற்பனையை நிறுத்தி கடையை மூடும்படி உத்தரவிட்டனர்.