Home Featured தமிழ் நாடு அந்நியச் செலவாணி மோசடி: சசிகலா, பாஸ்கரன் மீது குற்றச்சாட்டுப் பதிவு!

அந்நியச் செலவாணி மோசடி: சசிகலா, பாஸ்கரன் மீது குற்றச்சாட்டுப் பதிவு!

1240
0
SHARE
Ad

சென்னை – அந்நியச் செலவாணி மோசடி வழக்கில், சசிகலா, பாஸ்கரன் மீது சென்னை எழும்பூர் பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது.

அமலாக்கத்துறை சுமத்திய இக்குற்றச்சாட்டுக்கு சசிகலா தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவிடம், காணொளிக் காட்சி மூலம் நீதிபதி விசாரணை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.