Home Featured நாடு எனது மனைவிக்கு அமைச்சின் வர்த்தக அட்டையா? – நஸ்ரி மறுப்பு!

எனது மனைவிக்கு அமைச்சின் வர்த்தக அட்டையா? – நஸ்ரி மறுப்பு!

727
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தனது மனைவி டத்தின்ஸ்ரீ ஹாஃப்லின் சைபுலுக்கு, சுற்றுலா அமைச்சு வர்த்தக அட்டை வழங்கியதாகக் கூறப்படுவதை சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ் மறுத்திருக்கிறார்.

அதிகாரிகள் அல்லாதவர்களுக்கு எந்த வகையான வர்த்தக அட்டைகளையும் வழங்க தனது அமைச்சு அனுமதி வழங்காது என்றும் நஸ்ரி தெரிவித்திருக்கிறார்.

“அவர் அமைச்சுக்காகப் பணியாற்றவில்லை. அந்தத் தகவல் போலியானது” என்று நஸ்ரி தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

“டத்தின்ஸ்ரீ ஹாஃப்லின் எஸ்” என்ற பெயர் கொண்ட வர்த்தக அட்டையின் புகைப்படம் இன்று புதன்கிழமை நட்பு ஊடகங்களில் பரவியது.

அதில், சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சரின் மனைவி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், புத்ராஜெயாவிலுள்ள அமைச்சின் அலுவலக முகவரியும் அதில் அச்சிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.