Home Featured கலையுலகம் “மர்ம கடிதம்” -அஸ்ட்ரோவின் தொலைக்காட்சி நாடகம்

“மர்ம கடிதம்” -அஸ்ட்ரோவின் தொலைக்காட்சி நாடகம்

1497
0
SHARE
Ad

அன்பான கணவன் சுராஜ், அழகான மனைவி மாயா. திருமணமாகி 2 ஆண்டுகள், அழகாகப் பயணிக்கும் அவர்களின் குடும்ப வாழ்க்கையில் ஒரு நாள் மாயா தற்கொலைச் செய்து கொள்கிறாள்.

மாயாவின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று தெரியாமல் தவிக்கும் சுராஜ், அதனை அறிவதற்கு முயற்சிக்கும் போது பல உண்மைகள் தெரிய வருகிறது. மனைவியின் தற்கொலைக்குத் தன் நண்பன் பிரவின் தான் காரணம் என்ற உண்மையும் தெரிய வருகிறது.

#TamilSchoolmychoice

கள்ள காதலால் பலரின் வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது என்பதை மிகவும் எதார்த்தமாக கூறியிருக்கும் தொலைக்காட்சி நாடகம் “மர்ம கடிதம்”. இந்நாடகத்தில் பென்ஜீ, மணிமலர் பெருமாள், மணிவண்ணன், தேவிகா ஆகியோர் நடித்துள்ளார்கள்.

இயக்குனர் சீலா பிரவினா இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்நாடகத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை ஜூன் 25-ஆம் தேதி இரவு 10- மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201 மற்றும் ஆஸ்ட்ரோ கோ-வில் காணத் தவறாதீர்கள்.