அவரது வலையில் சரவணன் விழுந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை இழந்து விடுகிறார். அதனை மீட்க கிருஷ்ணாவின் உதவியை நாடுகிறார்.
கிருஷ்ணா, சரவணனின் சொத்துக்களை மீட்டுக் கொடுத்தாரா? இல்லையா? என்பது தான் கிளைமாக்ஸ்.
ரசிக்க
கிருஷ்ணா கட்டுமஸ்தாகக் காட்சியளிப்பதோடு, அந்தக் கதாப்பாத்திரத்தில் நன்றாகவே நடித்திருக்கிறார்.
ஆனந்தி அழகாக இருக்கிறார். ஆனால் நடிப்பதற்கான இடங்கள் வெகு குறைவு.
சரவணன், மதுசூதனன் ராவ், நிதின் சத்யா ஆகிய மூவரின் நடிப்பும் கதைக்கு பக்கபலம் சேர்த்திருக்கிறது.
பாண்டி, கருணாஸ் இவர்களோடு ஆதித்யா தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவர் ஆகியோரின் காமெடி ரசிக்க வைக்கின்றது. அதிலும் குறிப்பாக வீட்டில் திருடப் போகும் போது வரும் காமெடிக் காட்சிகள் ரசனை.
முதல் பாதியில் திரைக்கதை சற்று மெதுவாகச் சென்றாலும் கூட, இரண்டாம் பாதியில் வேகமெடுத்து கிளைமாக்ஸ் வரை விறுவிறுப்பைக் கூட்டுகிறது.
சலிப்பு
பல இடங்களில் வரும் அதிக சத்தத்துடன் கூடிய பின்னணி இசை காதைப் பிளக்கிறது. ரசிக்க முடியவில்லை.
பாடல்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் பண்டிகை – கொண்டாட முடியவில்லை என்றாலும் கூட இரண்டாம் பாதி விறுவிறுப்பை கொஞ்சம் ரசித்துவிட்டு வரலாம்.
-ஃபீனிக்ஸ்தாசன்