Home நாடு டெலிகிராம் செயலியைத் தடை செய்யும் திட்டமில்லை – சாஹிட்

டெலிகிராம் செயலியைத் தடை செய்யும் திட்டமில்லை – சாஹிட்

928
0
SHARE
Ad

ahmad-zahid-hamidiகோலாலம்பூர் – இந்தோனிசியாவில் டெலிகிராம் செயலி தடை செய்யப்பட்டதைப் போல், மலேசியாவிலும் அச்செயலி தடை செய்யப்படுமா? என்ற கேள்விக்கு இல்லையெனப் பதிலளித்திருக்கிறார் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி.

“அந்தச் செயலியின் மூலம் தீவிரவாதத்திற்கு ஆள் சேர்ப்பதாகவும், நிதி சேகரிப்பதாகவும் கூறப்படும் எந்த விசயத்தையும் உள்துறை அமைச்சும், தீவிரவாத ஒழிப்புப் பிரிவும் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பதால், இப்போதைக்கு அதனைத் தடை செய்யும் திட்டம் இல்லை. தொடர்ந்து அச்செயலியைக் கண்காணித்து வருவோம்” என்று சாஹிட் தெரிவித்திருக்கிறார்.

 

#TamilSchoolmychoice