Home வணிகம்/தொழில் நுட்பம் பாகிஸ்தான் கோரிக்கையை பேஸ்புக் நிராகரித்தது!

பாகிஸ்தான் கோரிக்கையை பேஸ்புக் நிராகரித்தது!

929
0
SHARE
Ad

facebookஇஸ்லாமாபாத் – பேஸ்புக் கணக்குகளில் சம்பந்தப்பட்டோரின் செல்பேசி எண்ணையும் இணைக்க பாகிஸ்தான் அரசு விடுத்த கோரிக்கையை பேஸ்புக் நிர்வாகம் நிராகரித்தது.

பேஸ்புக்கில் பலர் சமூகத்தில் பிளவையும், கலவரத்தையும் ஏற்படுத்தும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர் என்று குறிப்பிட்டிருக்கும் பாகிஸ்தான், அதனைத் தடுக்க அவரவரின் செல்பேசி எண்கள் இருந்தால் எளிதில் சம்பந்தப்பட்டவரைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும் என்று பேஸ்புக் நிர்வாகத்திற்குக் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், அவ்வாறு செல்பேசி எண்களை இணைக்க முடியாது என பேஸ்புக் நிர்வாகம் மறுத்துவிட்டது.