Home கலை உலகம் பிக்பாஸ்: காயத்ரி, ஓவியா சமாதானம் – ஜூலியை பாதிக்குமா?

பிக்பாஸ்: காயத்ரி, ஓவியா சமாதானம் – ஜூலியை பாதிக்குமா?

1014
0
SHARE
Ad

BigbossOviyaசென்னை – பிக்பாஸ் வீட்டில், ஜூலி கூறிய பொய்யால் ஏற்பட்ட மனக்கசப்பு காயத்ரி, ஓவியா இடையே மிகப் பெரிய பிளவை ஏற்படுத்தியது.

கடந்த சனிக்கிழமை, நிகழ்ச்சியில், ஜூலி கூறிய பொய்யை மற்ற ஹவுஸ்மேட்சும் அறிந்து கொள்ளும் வகையில், குறிப்பிட்ட அந்தக் காட்சியை உலகநாயகன் மீண்டும் ஒரு முறை ஒளிபரப்பிக் காட்டியும் கூட, காயத்ரி அதனை நம்ப மறுத்தார்.

நம்ப மறுத்தார் என்று சொல்வதை விட, ஜூலி கூறியதைக் கேட்டு அவசரப்பட்டு ஓவியாவை வெறுத்துவிட்ட காயத்ரி, தான் செய்தது சரி தான் என்ற நிலைப்பாட்டில் இருப்பதற்காக ஓவியாவின் மீது தப்பு இருப்பதாகவே சொல்லி தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டு வந்தார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், ஓவியா பலமுறை காயத்ரியிடம் சென்று சமாதானம் பேச முயற்சி செய்தும் கூட, காயத்ரி ஓவியாவிடமிருந்து தொடர்ந்து விலகிக் கொண்டே இருந்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், பிக்பாஸ் காயத்ரி, ஓவியா இருவரையும் அழைத்து மனவிட்டுப் பேச வைத்திருக்கிறார்.

இதனால் காயத்ரியும், ஓவியாவும் சமாதானம் ஆகிவிட்டது போல் விஜய் டிவியின் விளம்பரக் காணொளிகளில் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

இதனிடையே, ஜூலி கூறிய பொய்யை சினேகன், சக்தி உட்பட பலரும் வெளிப்படையாக மன்னிப்பதாகக் கூறினாலும் கூட, தனிமையில் பேசும் போது, அதை ஜீரணிக்க முடியவில்லை என்றே கூறுகின்றனர்.

எனவே, காயத்ரியின் ஆதரவில் இருந்து வந்த ஜூலிக்கு, காயத்ரி, ஓவியாவின் சமாதானம் நிச்சயமாக பாதகமான சூழலையே ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.