Home நாடு பண்டான் இண்டா பாலியல் வல்லுறவு, கொள்ளை: 7 பேர் கைது!

பண்டான் இண்டா பாலியல் வல்லுறவு, கொள்ளை: 7 பேர் கைது!

1260
0
SHARE
Ad

Malaysian Policeகாஜாங் – பண்டான் இண்டாவில் உள்ள நர்சரி ஒன்றில் இரண்டு பெண்களைப் பாலியல் வல்லுறவு புரிந்ததோடு, கொள்ளையிலும் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 7 பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை அம்பாங்கில், 20 வயதிலிருந்து 30 வயதிற்குள் இருக்கும் 6 பேரையும், 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரையும் காவல்துறை கைது செய்ததாக சிலாங்கூர் சிஐடி மூத்த துணை ஆணையர் ஃபாட்சில் அகமட் சையத் தெரிவித்திருக்கிறார்.

அவர்களிடமிருந்து திருடப்பட்ட திறன்பேசி ஒன்றையும் காவல்துறையினர் கைப்பற்றியிருக்கின்றனர்.