ஷாங்காய் – சீனாவில் சின்சுவான் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 9 பேர் மரணமடைந்தனர். 164 பேர் காயமடைந்தனர்.
செவ்வாய்க்கிழமை இரவு குவாங்யுவான் நகரில் இருந்து 120 மைல்ஸ் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருக்கிறது.