சென்னை – நீட் தேர்வுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்த மாணவி அனிதா, நேற்று வெள்ளிக்கிழமை மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் தமிழக முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அனிதாவின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என்று கூறி, தமிழகத்தில் பல்வேறு மாணவ நலன் சார்ந்த அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தப்படவிருப்பதாக வாட்சாப்பில் தகவல் பரவியதையடுத்து, மெரினாவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.
ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்த அனிதா, கட் ஆப் மதிப்பெண் 196.5 பெற்றிருந்தார்.
ஆனால், நீட் தேர்வில் 700-க்கு 86 மதிப்பெண்களே அனிதா பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.