Home நாடு ஜோகூரில் சிங்கப்பூரர் மரணம்: மலாய் தெரியாமல் தவித்த நண்பர்கள்!

ஜோகூரில் சிங்கப்பூரர் மரணம்: மலாய் தெரியாமல் தவித்த நண்பர்கள்!

1165
0
SHARE
Ad

Singaporeandeadinjohorகோலாலம்பூர் – கடந்த வெள்ளிக்கிழமை, ஜோகூர் பாருவில் கார் விபத்தில் சிக்கிய சிங்கப்பூரர் ஒருவர், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, சிகிச்சை தாமதமானதால் மரணமடைந்ததாகச் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், அவரை ஜோகூர் பாரு சுல்தானா அமினா மருத்துவமனையில் சேர்ந்த நண்பர் வெளியிட்டிருக்கும் தகவலில், அவசரச் சிகிச்சை தேவைப்பட்டாலும் கூட, முதலில் பணம் செலுத்த வேண்டும் என்று மருத்துவமனை கூறியதாகத் தெரிவித்திருக்கிறார்.

‘ஸ்டெரெயிட்ஸ் டைம்ஸ்’ செய்தி நிறுவனத்திற்கு ஜோசுவா த ரோசாரியோ தெரிவித்திருக்கும் தகவலில், மருத்துவமனைப் பணியாளர் மலாய் மொழியில் பேசியதாகவும், அதன் முடிவு மொழி புரியாமல் தவித்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

“அந்த நேரத்தில், நாங்கள் உடனடியாக வங்கி அட்டையில் செலுத்தாமல், ரொக்கப் பணமாகச் செலுத்த வேண்டும் என்று சொன்னதாகத் தான் எனக்குப் புரிந்தது. அந்த நேரத்தில் எங்களில் அவ்வளவு பெரிய தொகை இல்லை. அதனால் ஏடிஎம்-ஐ தேடி அங்கும் இங்கும் அலையும் நிலை ஏற்பட்டது. நாங்கள் உடனடியாகப் பணம் செலுத்த வேண்டும் என்று தான் எங்களுக்குத் தோன்றியது” என்று தெரிவித்திருக்கிறார்.