இதற்கிடையில், தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற நெருக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நாகப்பட்டினம், மயிலாடுதுறையில், மகாளய அமாவாசை திதியை முன்னிட்டு, தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் காவிரி நதியில் புனித நீராடினார்.
இன்று தமிழக அரசியலில் மற்றொரு திருப்பமும் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதுடில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றம் 2ஜி வழக்கில் இன்று புதன்கிழமை தனது முக்கியத் தீர்ப்பை வழங்கவிருக்கிறது என்ற தகவல்களாலும், இந்திய ஊடகங்கள் பரபரப்புக்குள்ளாகியிருக்கின்றன.
Comments