ஜோகூர் பாரு – வடகொரியத் தூதர் கிம் யு சோங்கை நேற்று செவ்வாய்க்கிழமை ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் சந்தித்ததையடுத்து, இனி ஜோகூரிலிருந்து எப்போது வேண்டுமானாலும் நேரடியாக வடகொரியாவின் தலைநகர் பியோங்யாங்கிற்கு அவர் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து ஜோகூர் சதர்ன் டைகர்ஸ் பேஸ்புக் பக்கத்தில் ஜோகூர் அரண்மனையின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டிருக்கும் தகவலில், “இது ஒரு மிகப் பெரிய மரியாதை. காரணம் மற்ற உலகத் தலைவர்கள் அனைவரும் அங்கு செல்வதற்கு முன்பு பெய்ஜிங்கில் இறங்கித் தான் ஆக வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.
வெளியுறவு மற்றும் நடப்பு விவகாரங்களுக்காகவும், ஏஎப்சி ஆசியான் கோப்பை யுஏஇ 2019 குழு பி போட்டி தொடர்பாகவும், மலேசிய காற்பந்துச் சங்கத் தலைவரான துங்கு இஸ்மாயில், நேற்று கிம்மைச் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.