Home கலை உலகம் இசைஞானி இளையராஜாவின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!

இசைஞானி இளையராஜாவின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!

1171
0
SHARE
Ad

Ilayaraja-hero-imageகோலாலம்பூர் – மை ஈவண்ட்ஸ் ஏற்பாட்டில் இசைஞானி இளையராஜாவின், ‘ராஜா தி ஒன் மேன் ஷோ’ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி இன்று புக்கிட் ஜாலில் அக்‌ஷிதா அரங்கில் நடைபெறுகின்றது.

இன்று சனிக்கிழமை இரவு 7 மணியளவில் அரங்கம் நிறைந்த மலேசிய ரசிகர்களின் கரகோஷங்களுக்கு இடையில் இந்த இசை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறவிருக்கின்றது.

இந்த இசை நிகழ்ச்சியில், இளையராஜாவின் ஆஸ்தான பாடகர்களான மனோ, சித்ரா, ஹரிஹரன் ஆகியோரோடு, அவரது மொத்த ஆர்கஸ்ட்ராவும் நேரடியாக இசை நிகழ்ச்சி படைக்கவிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

அதுமட்டுமின்றி, கார்த்திக், ரம்யா என்எஸ்கே, ரீத்தா, அனிதா உட்பட சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா, லெட்சுமி உள்ளிட்ட இளம் பாடகர்களும் பாடுகின்றனர்.

இது குறித்து சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், கலந்து கொண்ட இசைஞானி இளையராஜா, இந்த இசை நிகழ்ச்சியில் தனக்கும் மக்களுக்கும் இடையில் மிகவும் நெருக்கமான, அவர்களின் அனைத்து இன்ப துன்பங்களிலும் பங்கெடுத்து வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கும் புகழ்பெற்ற பாடல்களைத் தங்கள் குழுவினர் படைக்கவிருப்பதாகக் குறிப்பிட்டார்.

மேலும், இந்த நிகழ்ச்சி மலேசிய ரசிகர்களுக்கு நிச்சயமாக ஒரு மருந்தாக அமைந்து கவலைகளையெல்லாம் சுமார் 4 மணி நேரத்தில் போக்கிவிடும் என்றும் இளையராஜா தெரிவித்தார்.