மம்தா பானர்ஜியின் வலதுகரமாகத் திகழ்ந்தவரும், திரிணாமுல் கட்சியின் தூண்களில் ஒருவராக இருந்து கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான போராட்டத்தை நடத்தியவருமான முகுல் ராய் பாஜகவில் இணைந்தது, மம்தாவுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
பாஜகவின் சட்டத் துறை அமைச்சர் இரவிசங்கர் பிரசாத் முன்னிலையில் பாஜகவில் இணைந்ததை அறிவித்த முகுல் ராய், இரவிசங்கரிடமிருந்து பாஜக உறுப்பிய அட்டையைப் பெற்றுக் கொண்டார்.
அதன் பின்னர் பாஜக கட்சியின் தலைவர் அமிட் ஷாவை முகுல் ராய் சந்தித்தார். மேற்கு வங்காளத்தின் தனது ஆதிக்கத்தைப் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பாஜகவின் முயற்சிகளுக்கு முகுல் ராயின் வரவு பேருதவியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.