Home நாடு இளவரசர் சார்லஸ், கமீலா தம்பதியுடன் நஜிப், ரோஸ்மா சந்திப்பு!

இளவரசர் சார்லஸ், கமீலா தம்பதியுடன் நஜிப், ரோஸ்மா சந்திப்பு!

985
0
SHARE
Ad

Najib-Charlesகோலாலம்பூர் – நேற்று வெள்ளிக்கிழமை மாலை மெஜஸ்டிக் தங்கும் விடுதியில், இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலா ஆகியோர் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரைச் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பு ஒரு 15 நிமிடங்கள் நீடித்தது.

பிரிட்டனும், மலேசியாவும் கடந்த 60 ஆண்டுகளாக நட்புறவோடு இருப்பதைக் கொண்டாடும் விதமாக இளவரசர் சார்லசும், அவரது மனைவி கமீலாவும் அதிகாரப்பூர்வப் பயணமாக மலேசியாவுக்கு வருவை புரிந்திருக்கின்றனர்.

மலேசியாவில் அவர்கள் கோலாலம்பூர், பேராக், சரவாக் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களைப் பார்வையிடவிருக்கும் அவர்கள் வரும் நவம்பர் 8-ம் தேதி வரையில் மலேசியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice