Home வணிகம்/தொழில் நுட்பம் துபாயில் போதை வழக்கில் டியூன் டாக் அதிபர் கைதா?

துபாயில் போதை வழக்கில் டியூன் டாக் அதிபர் கைதா?

1296
0
SHARE
Ad

TuneTalkCEOகோலாலம்பூர் – போதை மருந்து வைத்திருந்ததற்காக, துபாயில், தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாகக் கூறும் தகவலை, மலேசியாவின் பிரபல டியூன் டாக் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி ஜேசன் லோ மறுத்திருக்கிறார்.

இது குறித்து நேற்று இணையதளம் ஒன்றிற்கு லோ அளித்திருக்கும் பேட்டியில், நண்பர் ஒருவரின் தகராறில், தலையிட்டு உதவச் சென்று, அதனால் காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறார்.

எனினும், முன்னதாக ஹரியான் மெட்ரோ செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த செய்தியில், கடந்த செப்டம்பர் 18-ம் தேதி, ஆம்ஸ்டெர்டாமில் இருந்து துபாய் செல்லும் போது, விமான நிலையத்தில் அவரை துபாய் காவல்துறை கைது செய்தது என்றும், 3 மாதங்களாக அல்அவீர் மத்தியச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த லோ, கடந்த நவம்பர் 7-ம் தேதி தான் தண்டனை முடிந்து விடுவிக்கப்பட்டார் என்றும் அந்த செய்தி அறிக்கை கூறியிருந்தது.

#TamilSchoolmychoice