Home இந்தியா 187 இடங்களில், 1800 அதிகாரிகளின் சோதனைகள்! தொடர்கின்றன!

187 இடங்களில், 1800 அதிகாரிகளின் சோதனைகள்! தொடர்கின்றன!

1300
0
SHARE
Ad

sasikala_dinakaran-comboசென்னை – தமிழகத்தில் வருமான வரி சோதனை நடவடிக்கைகளில் வரலாறு காணாத விதமாக, நேற்று வியாழக்கிழமை சசிகலா மற்றும் டிடிவி தினகரன் உறவினர்களின் தொடர்புடைய 187 இடங்களில், மொத்தம் 1,800 அதிகாரிகள் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டனர்.

இந்த சோதனைகள் இன்றும் தொடர்கின்றன.

ஜெயலலிதாவின் சொந்த வீடான போயஸ் கார்டன் இல்லத்திலும், அவர் ஓய்வெடுக்கும் இல்லமான கொடநாடு எஸ்டேட் இல்லத்திலும் அதிகாரிகள் நுழைந்து சோதனைகள் நடத்தப்பட்டன.

#TamilSchoolmychoice

இதன் தொடர்பிலான மேலும் சில முக்கியத் தகவல்கள் வருமாறு:

  • சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மன்னார்குடி இல்லத்தில் சுமார் 14 மணி நேரம் சோதனைகள் நடத்தப்பட்டன.
  • தினகரனின் விழுப்புரம் பண்ணை வீட்டில் சோதனைகள் நிறைவு பெற்று, ஒரே ஒரு அறை மட்டும் சீல் முத்திரையிடப்பட்டு மூடப்பட்டிருக்கிறது.
  • சசிகலா மற்றும் தினகரன் உறவினர்கள் மட்டுமின்றி, அவர்களின் வணிகப் பங்குதாரர்களின் இல்லங்களிலும், அலுவலகங்களிலும் கூட சோதனைகள் நடத்தப்பட்டன.
  • ஜாஸ் சினிமாஸ் எனப்படும் திரையரங்குகளை நடத்தும் நிறுவனம் மீதும் சோதனைகள் நடத்தப்பட்டதால் அந்த நிறுவனத்தின் சில திரையரங்குகளில் படங்கள் நேற்று திரையிடப்படவில்லை.
  • சசிகலா அண்மையில் பரோலில் சிறையிலிருந்து வெளிவந்த போது தங்கியிருந்த கிருஷ்ணப் பிரியா இல்லத்திலும் சோதனை நடத்தப்பட்டது. கிருஷ்ணப் பிரியாவின் தாயார் இளவரசி தற்போது சசிகலாவுடன் சிறையில் இருந்து வருகிறார்.
  • பல இல்லங்களில் சில அறைகள் அதிகாரிகளால் மூடி, சீல் வைக்கப்பட்டன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.