மனுஷி சில்லார் என்ற வித்தியாசமானப் பெயர் கொண்டவர், பெயரைப் போலவே சில்லென்ற குளிர்ச்சியான அழகுடன் பவனி வருகிறார். மருத்துவத் துறை மாணவி என்ற கல்வித் தகுதியும் கூடவே!


சில்லார் உலக அழகிப் பட்டத்தை ஆறாவது முறையாக வென்ற இந்தியப் பெண்ணாவார். இதுவரையில் உலக அளவில், வெனிசூலா என்ற தென் அமெரிக்க நாடு மட்டுமே ஆறுமுறை மிஸ் வோர்ல்ட் என்ற உலக அழகிப் பட்டத்தை வென்று, அதிக அளவில் அந்தப் பட்டத்தை வென்ற நாடாகத் திகழ்ந்து வந்தது. தற்போது, மனுஷியின் வெற்றியால் இந்தியாவும் அந்த அந்தஸ்தை பெற்று விட்டது.






அந்த வரிசையில் மனுஷிக்கும் சினிமா வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவர் சினிமாவுக்கு வருவாரா என்பது குறித்து இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவுமில்லை.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மனுஷி சில்லார் விரைவில் இந்திப் படவுலகில் காலடி வைப்பாரா அல்லது மருத்துவத் துறை படிப்பைத் தொடர்வாரா என்பதைத் தெரிந்து கொள்ள அவருடைய இரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
கவர்ச்சி, அழகு, அழகான பல்வரிசை என அனைத்து அம்சங்களிலும் வித்தியாசமான தோற்றத்துடன் கம்பீரமாகக் காட்சியளிக்கும் மனுஷி சில்லாரை இந்தித் திரையுலகம் வாரியணைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரே நாளில் உலகப் புகழ் பெற்றுவிட்ட மனுஷி சில்லார் தற்போது அனைத்து ஊடகங்கள், சமூக வலைத் தளங்களிலும் பெரிதும் பேசப்படும் நாயகியாகி விட்டார். அவரது புகைப்படங்கள் எல்லா சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டு வருகின்றன.
இங்கே நீங்கள் காண்பது, மனுஷி சில்லாரின் இன்ஸ்டாகிராம் பதிவுகளில் காணப்படும் புகைப்படங்கள்!