Home நாடு 3 பிள்ளைகளையும் கொன்று தந்தை தற்கொலை: கடன் தொல்லை காரணமா?

3 பிள்ளைகளையும் கொன்று தந்தை தற்கொலை: கடன் தொல்லை காரணமா?

1102
0
SHARE
Ad

Sungaipetanimurder-suicideசுங்கை பட்டாணி – சுங்கை பட்டாணியில் நேற்று திங்கட்கிழமை தனது மூன்று பிள்ளைகளையும் கொன்று, தூக்கிலிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சிவராசு, கடன் தொல்லையில் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

3 வாரங்களுக்கு முன்பு தனது மனைவி வி.காமினி, தூக்கிலிட்டுத் தற்கொலை செய்து கொண்டதால், மிகவும் மன உளைச்சலில் சிவராசு இருந்ததாகக் கூறப்படுகின்றது.

காமினி இறந்ததற்குப் பிறகு அவரது தாயார் புனிதா, தனது மருமகன் வீட்டில் பேரக் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதற்காகத் தங்கியிருந்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு, உணவு சாப்பிட்ட பின்பு சிவராசுவும், அவரது மூன்று பிள்ளைகளும் மேல்மாடிக்கு உறங்கச் சென்றிருக்கின்றனர்.

அதிகாலை 5 மணியளவில் தனது பேத்தி அழும் குரல் கேட்டு, என்னவென்று விசாரித்திருக்கிறார் புனிதா.

ஆனால், ஒன்றுமில்லை கனவு கண்டிருக்கிறார் என்று கூறியிருக்கிறார் சிவராசு.

அதன் பின்னர், காலையில் எழுந்து வழக்கமான வேலைகளைச் செய்த புனிதா, மதியம் வரை யாரும் கீழே வராமல் இருந்ததால் மேலே சென்று பார்த்த போது 4 பேரும் இறந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

இதனிடையே, இன்று செவ்வாய்க்கிழமை, 4 பேரின் இறுதிச் சடங்குகளும் நடந்தன.

அதில் கலந்து கொண்ட சிவராசுவின் சகோதரர், தனது சகோதரர் கடன் தொல்லையில் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுவதைத் தன்னால் நம்ப முடியவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

தற்போது இந்த கொலை-தற்கொலைச் சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது.