ஹாங் காங் – கடந்த வாரம் புதன்கிழமை வடகொரியா மீண்டும் தனது தொலைதூர ஏவுகணையைப் பரிசோதனை செய்தது.
அந்த ஏவுகணை, வடகொரியாவில் இருந்து பறந்து சென்று அமெரிக்காவைத் தாக்கும் வல்லமை கொண்டது என ஆய்வாளர்கள் கூறுகின்றன.
இந்நிலையில், அந்த ஏவுகணையை, சீனாவின் தெற்குப் பகுதிக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் பறந்து கொண்டிருந்த கேத்தே பசிபிக் சிஎக்ஸ்893 விமானத்தைச் சேர்ந்த விமானிகளும், பணியாளர்களும் பார்த்ததாக நேற்று திங்கட்கிழமை கேத்தே பசிபிக் நிறுவனம் அறிக்கை விடுத்திருக்கிறது.
அந்த ஏவுகணையைக் கண்ட விமானிகள் உடனடியாக ஹாங் காங் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததாகவும் கேத்தே கூறியிருக்கிறது.