Home நாடு விரைவில் பல பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதியக் கடப்பிதழ்: சாஹிட்

விரைவில் பல பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதியக் கடப்பிதழ்: சாஹிட்

1211
0
SHARE
Ad

Zahidகோலாலம்பூர் – பழைய அம்சங்களுடன் கூடிய 81,000 மலேசியக் கடப்பிதழ்கள் மிக விரைவில் விநியோகம் செய்யப்பட்டுவிடும் என்றும், அதன் பிறகு பல்வேறு புதிய அம்சங்களுடன் கூடிய புதியக் கடப்பிதழ்கள் மலேசியர்களுக்கு வழங்கப்படும் என்றும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்திருக்கிறார்.

இன்னும் ஒன்றரை மாதங்களில், கடப்பிதழ் வைத்திருக்கும் அனைத்து மலேசியர்களும் பல பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய கடப்பிதழைப் பயன்படுத்தத் தொடங்கலாம் என்றும் சாஹிட் குறிப்பிட்டிருக்கிறார்.

“நம்மால் ஆண்டுக்கு 5 மில்லியன் கடப்பிதழ்களைத் தயாரிக்க முடியும். பழையக் கடப்பிதழ்களையும் பயன்படுத்த முடியும். அதேவேளையில் நாங்கள் புதியக் கடப்பிதழ்களை விநியோகம் செய்யத் தொடங்கிவிட்டோம்”

#TamilSchoolmychoice

“தற்போது மொத்தம் 81,000 பழையக் கடப்பிதழ்கள் மட்டுமே மிச்சம் இருக்கிறது. இன்னும் ஒன்றரை மாதங்களில் அவை விநியோகம் செய்யப்பட்டுவிடும். குறிப்பாக இந்த விடுமுறைக் காலங்களில்” என்று சாஹிட் நேற்று வியாழக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.

புதிதாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் கடப்பிதழில் பயோமெட்ரிக் மற்றும் முக அங்கீகாரத் திறன்கள் இருப்பதோடு, அனைத்துலக உள்நாட்டு வான்போக்குவரத்து ஒருங்கிணைப்பு (International Civil Aviation Organisation) நிர்ணயித்திருக்கும் தரநிலையையும் கொண்டிருக்கிறது என்றும் சாஹிட் குறிப்பிட்டார்.