Home இந்தியா தமிழகப் பிரமுகர்களின் வாழ்த்துகளுடன் டி.மோகனுக்கு சென்னையில் பாராட்டு விழா

தமிழகப் பிரமுகர்களின் வாழ்த்துகளுடன் டி.மோகனுக்கு சென்னையில் பாராட்டு விழா

1645
0
SHARE
Ad

mohan-senator-chennai-function-20122017 (10)சென்னை – மஇகாவின் தேசிய உதவித் தலைவரும், மிபா எனப்படும் மலேசிய இந்தியக் காற்பந்து குழுவின் தலைவருமான டத்தோ டி.மோகன் கடந்த நவம்பர் மாதம் 16-ஆம் தேதி செனட்டராக பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டதை முன்னிட்டு, புதன்கிழமை டிசம்பர் 20-ஆம் தேதி சென்னை கிளாரியன் பிரசிடெண்ட் தங்கு விடுதியில் பிரம்மாண்டமான அளவில் பாராட்டு விழா நடந்தேறியது.

இந்தப் பாராட்டு விழா தமிழகக் காங்கிரஸ் பிரமுகரும் அகில இந்திய கராத்தே சங்கத் தலைவருமான கராத்தே தியாகராஜன் ஏற்பாட்டில் தமிழகக் காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது.

mohan-senator-chennai-function-20122017 (8)
நக்கீரன் கோபாலுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்கிறார் கராத்தே தியாகராஜன்…

இந்தப் பாராட்டு விழாவில் நடிகரும் சமத்துவ கட்சித் தலைவருமான சரத்குமார், நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபால், ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

#TamilSchoolmychoice

மேலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ராதாரவி, இந்திய குடியரசுக்கட்சி தலைவர் செ.கு.தமிழரசன், பி.கே.சேகர் பாபு, வாகை சந்திரசேகர், வி.ஆர்.எஸ்.சம்பத், நடிகர் செந்தில், நடிகை கஸ்தூரி போன்ற தமிழகப் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

mohan-senator-chennai-function-20122017 (9)இந்தப் பாராட்டு விழாவில் மலேசியாவிலிருந்து மஇகாவின் தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி, இளைஞர் பகுதி தேசியத்தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன், மத்திய செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் காளிமுத்து, பாலகுமாரன், தமிழ்வாணன் , விஜய், புனிதன் மற்றும் மிபா காற்பந்து சங்கத்தைச் சார்ந்த டத்தோ பதி, வீரா, பன்னீர், வினோ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

mohan-senator-chennai-20122017சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த விழாவில் டி.மோகன் கலந்து கொண்டவர்களுக்கும், தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மேலும் இந்தியா – மலேசியாவிற்கான உறவுப்பாலத்தை தமிழகம் சார்ந்து இன்னும் அதிகமாக வலுப்படுத்த முயற்சிகளை மேற்கொள்ளப் போவதாகவும் அவர் தனதுரையில் நம்பிக்கை தெரிவித்தார்.