Home கலை உலகம் நட்சத்திர விழா மாபெரும் வெற்றி: ரசிகர்களுக்கு மை ஈவண்ட்ஸ் நன்றி!

நட்சத்திர விழா மாபெரும் வெற்றி: ரசிகர்களுக்கு மை ஈவண்ட்ஸ் நன்றி!

1531
0
SHARE
Ad
NatchathiravizhaPC09012018 (1)
நட்சத்திர விழா 2018′ மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றதற்கான சான்றிதழை மைஈவண்ட்ஸ் நிறுவனர் வழங்க அதனை நடிகர் விஷால் பெற்றுக் கொள்கிறார்.

கோலாலம்பூர் – தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஏற்பாட்டில் மை ஈவண்ட்ஸ் இண்டர்நேஷனல் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்த பிரம்மாண்ட ‘நட்சத்திர விழா 2018’ மாபெரும் வெற்றி பெற்றதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருக்கின்றனர்.

இது தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மை ஈவண்ட்ஸ் தலைமைச் செயலதிகாரி ஷாகுல், தென்னிந்திய நடிகர் சங்கச் செயலாளர் விஷால், நடிகர் நந்தா, நடிகர் ரமணா, காசிம் அமைப்பின் தலைவர் விஜய் எமர்ஜென்சி ஆகியோர் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட விதம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்தனர்.

இச்சந்திப்புக் கூட்டத்தில் பேசிய ஷாகுல், இவ்வளவு பெரிய பிரம்மாண்ட விழாவை எந்த ஒரு தடங்களும் இல்லாமல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கக் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

#TamilSchoolmychoice

குறிப்பாக தமிழகத்தில் இருந்து ஒட்டுமொத்த கலைஞர்களையும் இங்கு அழைத்து வந்த நடிகர் விஷாலுக்கு தனது பாராட்டுகளையும், தெரிவித்துக் கொண்டார்.

என்றாலும், சில தரப்பினர் தென்னிந்தியாவில் இருந்து நடிகர்கள் இங்கு நிதி திரட்ட வருகின்றார்கள். பிச்சை எடுக்க வருகின்றார்கள் என மிக அவதூறாகப் பேசுவது சற்று வருத்தமாக இருக்கின்றது என்றும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான தான் இவ்விழாவிற்காக எந்த ஒரு நிதியையும் கொடுக்கவில்லை என்றும் ஷாகுல் குறிப்பிட்டார்.

எனவே, இது போன்ற பேச்சுகளுக்கு மலேசியாவில் சில தரப்பினர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், பேசுவதற்கு முன்னால், எதையும் முழுமையாக விசாரித்துப் பேச வேண்டும் என்றும் ஷாகுல் கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்துப் பேசிய நடிகர் விஷால், எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும் யாராவது ஒரு தரப்பினர் அதனைக் குறை கூறிக் கொண்டே தான் இருப்பார்கள். ஆனால் நல்லது நடப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று தெரிவித்தார்.

NatchathiravizhaPC09012018இந்த விழாவின் மூலமாக தானோ, தனது உறுப்பினர்களோ சொந்தமாக வீடோ, ஃபெராரி காரோ வாங்கிக் கொள்ளப் போவதில்லை என்றும், தென்னிந்திய நடிகர் இவ்வளவு பெரிய விழாவில் மலேசியாவில் இங்குள்ள கலைஞர்களோடும், ரசிகர்களோடும் இணைந்து நடத்தியது என்ற பெருமை மட்டுமே தங்களுக்குக் கிடைக்கும் ஆதாயம் என்றும் விஷால் குறிப்பிட்டார்.

இதனிடையே, இவ்விழா குறித்து மை ஈவண்ட்ஸ் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“சுமார் 350-க்கும் மேற்பட்ட நடிகர்கள் பங்கேற்ற இக்கலை நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டது இவ்விழாவின் முக்கிய அங்கமாகத் திகழ்ந்தது.”

“முன்னணி கதாநாயகர்கள் சூர்யா, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், ஆர்யா, ஜெயம்ரவி, அதர்வா உள்ளிட்ட ஏராளமான நடிகர்களும் இதில் கலந்து கொண்டனர்.”

“அதுமட்டுமின்றி, 60-ம், 70-ம் ஆண்டுகளில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த சரோஜாதேவி, விஜயகுமாரி, ஷீலா, சச்சூ, ஜெயமாலினி ஆகியோர் கலந்து கொண்டது இந்நிகழ்ச்சிக்குப் பெருமை சேர்த்தது.”

“அதேபோல் தற்போதைய முன்னணி நடிகைகள் காஜல் அகர்வால், ராய் லஷ்மி, ஐஸ்வர்யா ராஜேஸ், சாயிஷா, அஞ்சலி, வரலஷ்மி, சாஷி அகர்வால் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டு அழகு சேர்த்தனர்.”

“சுமார் 37,000 பார்வையாளர்களுடன் காலை 11 மணிக்குத் தொடங்கிய விழா, நள்ளிரவு வரை நீடித்து, மலேசிய சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றுவிட்டது.” என்று தெரிவித்திருக்கிறது.